உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பு.கொணாலவாடியில் அய்யனார் கருமி அம்மன் கோவில் தேரோட்டம்

பு.கொணாலவாடியில் அய்யனார் கருமி அம்மன் கோவில் தேரோட்டம்

உளுந்தூர்பேட்டை: பு.கொணாலவாடி கிராம ஸ்ரீ அய்யனார் கருமி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.


உளுந்தூர்பேட்டை அடுத்த பு.கொணாலவாடி கிராமத்தில் ஸ்ரீ அய்யனார் கருமி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. அதனையொட்டி கடந்த 21ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. பின்னர் 28, 29.30ம் தேதிகளில் இரவு ஸ்ரீ அய்யனார் கருமி அம்மன் சுவாமி சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு கேடய வாகனத்தில் வீதியுலா வந்தது.  31ம் தேதி மற்றும் 1, 2 ம் தேதிகளில் சுவாமி சிங்க வாகனத்தில் வீதியுலா வந்தது. 3ம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் 60 அடி உயர மாகமேறு உற்சவம் நடந்தது. அதன் பின்னர் இன்று சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேர் வீதியுலா வந்தது. தேரை ஏராளமானோர் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !