பழநி மலைக்கோயிலில் வைகாசி விசாக உற்ஸவ சாந்தி
ADDED :2753 days ago
பழநி, பழநி மலைக்கோயிலில் வைகாசி விசாகவிழா நிறைவு உற்ஸவ சாந்தியை முன்னிட்டு, கைலாசநாதர் சன்னதியில் யாகபூஜை நடந்தது. பழநி முருகன் கோயிலில் கடந்த மே 22 முதல் 31 வரை வைகாசி விசாக விழா நடந்தது. இவ்விழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று உற்ஸவசாந்தி நடந்தது. மலைக்கோயில் கைலாசநாதர் சன்னதியில் தலைமை குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்ரமணியம் குழுவினர் புனிதநீர் நிரம்பிய வெள்ளி கும்பகலசம் வைத்து, யாகபூஜை செய்தனர். உச்சிகால பூஜையில் மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு கும்பகலசநீர் அபிேஷகம் செய்து தீபாராதனை நடந்தது. திரளா னோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ் செய்தார்.