ஆழ்வார்குறிச்சி கோயிலில் கருடசேவை
ADDED :4981 days ago
ஆழ்வார்குறிச்சி:ஆழ்வார்குறிச்சி வேங்கடேச பெருமாள் கோயிலில் பொங்கலன்று கருடசேவை உற்சவம் நடந்தது.ஆழ்வார்குறிச்சி வேங்கடேச பெருமாள் கோயிலில் கடந்த 5ம் தேதி வைகுண்ட ஏகாதசி நடந்தது. தொடர்ந்து தினமும் மாலை பெருமாள் ஒவ்வொரு வித அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். பொங்கல் திருநாளன்று காலை பெங்கநாத அய்யங்கார், நம்பிராஜன், சம்பத்குமார் ஆகியோர் கும்பஜெபம், வேதபாராயணம், விசேஷ அபிஷேகம் சிறப்பு அலங்காரத்துடன் கூடிய பூஜைகளை நடத்தினர். மாலையில் சகஸ்கர நாம அர்ச்சனை, இரவு பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது.