பெருமாள் கோவிலில் மட்டையடி உற்சவம்
ADDED :4981 days ago
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் வீரநாராயண பெருமாள் கோவிலில் காணும் பொங்கலை முன்னிட்டு மட்டையடி உற்சவம் நடந்தது. விழாவில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் வீதியுலா நடந்தது. பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மட்டையடி புராணம், ஸ்தலம் புராணம் சொற்பொழிவு நடந்தது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர், தக்கார், கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.