அற்புத நடராஜ பெருமான்!
ADDED :2853 days ago
திருவெண்காடு திருத்தலத்தில் உறையும் நடராஜப் பெருமான் அற்புதக் கோலம் கொண்டு திகழ்பவர். அவரது காலில் 14 புவனங்களைக் குறிக்கும் 14 சதங்கைகள் கொண்ட காப்பு உள்ளது. பிரணவம் முதல் நமக வரையில் உள்ள 81 பதமந்திரங்களை உணர்த்தும் 81 சங்கிலி வளையங்கள் கோர்த்த அரைஞாண் இடுப்பை அலங்கரிக்கிறது. 28 ஆகமங்களைக் குறிக்கும் 28 எலும்புத்துண்டுகள் கட்டிய ஆரம் அவரது மார்பை அலங்கரிக்கிறது. 16 கலைகளைக் குறிப்பிடும் 16 சடைகள் கொண்டவராய் இறைவன் காட்சியளிக்கிறார்.