சோழவந்தான் வைகை ஆற்றில் தீர்த்தவாரி உற்ஸவம்
ADDED :3034 days ago
சோழவந்தான், சோழவந்தான் வைகை ஆற்றில் நடந்த வைகாசி திருவிழா தீர்த்தவாரி உற்ஸவத்தில் எழுந்தருளிய ஜெனகை மாரியம்மனை பக்தர்கள் தரிசித்தனர். இக்கோயில் வைகாசி திருவிழா மே 21ல் கொடியேற்றத்துடன் துவங்கி 17 நாட்கள் நடந்தது. நேற்று முன் தினம் மாலை கோயில் கம்பத்திலிருந்து கொடி இறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு வைகையாற்றில் தீர்த்தவாரி உற்ஸவத்துடன் விழா நிறைவுற்றது. புஷ்பராஜ அலங்காரத்தில் அம்மன் பொன்னுாஞ்சலில் அருள்பாலித்தார். ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி லதா, உபயதாரர் பால்பாண்டியன் குடும்பத்தார் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.