தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உலக நன்மைக்கு யாகம்
ADDED :2792 days ago
வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உலக மக்கள் நன்மைக்காக, சண்டி யாகத்துடன், 64 பைரவி, பைரவர் யாகம் நடந்தது. இதையொட்டி, விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, கணபதி ?ஹாமம், கோ பூஜை, அஷ்ட பைரவருடன், சொர்ண கால பைரவர், மூல மந்திர ?ஹாமம் நடந்தது. முரளிதர சுவாமிகள், பொள்ளாச்சி சுவாமி சுப்பிரமணி, அண்ணாமலை, தென்னிந்திய புரோகிதர் சங்க தலைவர் சீதாராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.