வத்திராயிருப்பு, குளத்துக்கரை விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2690 days ago
வத்திராயிருப்பு, வத்திராயிருப்பு பெரிய ஊரணிக்கரை குளத்துக்கரை விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல்நாள் காப்புக்கட்ட கணபதி ஹோமம் துவங்கியது. முதல்கால யாகபூஜைகள், கோமாதா பூஜை, சுமங்கலிபூஜை, தீர்த்த சங்கரணபூஜைகள் யந்திர பிரதிஷ்டை நடந்தது. 2ம் நாளில் நாடிசந்தானம், நாமகரணம் சூட்டல் ரக் ஷாபந்தன பூஜைகளுடன் யாகசலை பூஜைகள் நிறைவு பெற்றது. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கும்பநீரை சிவாச்சார்யார்கள் சுமந்தபடி கோயிலை வலம் வந்தனர். பக்தர்கள் பூக்களை துாவி வணங்கினர். பின்னர் கோயில் கோபுரகலசத்திற்கு கும்பநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. அபிஷேக நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அன்னதானம் நடந்தது.