உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமுருகன் கோவிலில் மகாகும்பாபிசேகம்

பாலமுருகன் கோவிலில் மகாகும்பாபிசேகம்

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகரில் உள்ள ஸ்ரீபாலமுருகன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகரில் உள்ள ஸ்ரீபாலமுருகன் கோவில் வளாகத்தில் உள்ள பாலகணபதி, பாலமுருகன், பாலாம்பிகா சமேத முகிலேஷ்வரர், ஸ்ரீதேவிபூேதவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள், அனுமன் கருடாழ்வார், சபரி ஐயப்பன், நவகிரஹ மூர்த்தி கள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு ஒரு ஆண்டு நிறைவு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலை மங்கள இசையுடன் அனுக்ஞை ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம் தொடர்ந்து முதற்கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை 7:00 மணிக்கு யாகபூஜை, கோ பூஜை, சூரிய கும்ப பூஜை நடந்தது. தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடு, 9:30 மணிக்கு அனைத்து சுவாமிகளுக்கும் கலசத்தில் உள்ள புனித நீர் ஊற்றி, கும்பாபிேஷகம் நடந்தது. விழாவினை பாஸ்கர் சர்மா தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.அய்யர் ஜெயராமன் மற்றும் பாலமுருகன் கோவில் விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !