கருப்பையா கோவிலில் கலசாபிஷேக விழா
ADDED :2756 days ago
தலைவாசல்: தலைவாசல், புத்தூரிலுள்ள கருப்பையா கோவில் கும்பாபிஷேகம் கடந்தாண்டு நடந்தது. ஓராண்டு முடிந்த நிலையில், மறு கும்ப கலசாபி?ஷக விழா, நேற்று நடந்தது. அதை முன்னிட்டு, காலை, இரண்டாம் கால பூஜை நடத்தி, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, கோவிலைச் சுற்றி, மூலவரை, பக்தர்கள் வலம் வரச்செய்தனர். பின், பச்சி நாச்சியம்மன், அரிய நாச்சியம்மன், கருப்பையா சுவாமிகளுக்கு, மறு கும்ப கலசாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.