உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திரசூடேஸ்வரர் கோவிலில் ரூ.6.58 லட்சத்திற்கு கடைகள் ஏலம்

சந்திரசூடேஸ்வரர் கோவிலில் ரூ.6.58 லட்சத்திற்கு கடைகள் ஏலம்

ஓசூர்: ஓசூர் மலை மீது, மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில், ஆண்டுதோறும் ஜூன் மாதம் கடைகள் மற்றும் நிலங்கள் ஏலம் விடப்படும். இந்தாண்டுக்கான ஏலம், தர்மபுரி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நித்யா மற்றும் கோவில் செயல் அலுவலர் ராஜரத்தினம் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது கடந்த ஆண்டு, ஒரு லட்சத்து, 66 ஆயிரத்து, 666 ரூபாய்க்கு ஏலம் போன பிரசாத கடை, இந்தாண்டு, நான்கு லட்சத்து, 32 ஆயிரம் ரூபாய், ஒரு லட்சத்து, 99 ஆயிரத்து, 350 ரூபாய்க்கு ஏலம் போன பொரி, தேங்காய், பூக்கடைகள், இந்தாண்டு, இரண்டு லட்சத்து, 26 ஆயிரத்து, 800 ரூபாய்க்கு ஏலம் போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !