உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தத்து கொடுத்தா ஆயுள் கூடும்

தத்து கொடுத்தா ஆயுள் கூடும்

ஐந்து வயதிற்குள் குழந்தைகளுக்கு பாலாரிஷ்ட தோஷம் உண்டாகும். ஜாதகத்தில் பாவ கிரகங்களின் சேர்க்கை மற்றும் பார்வையால் ஏற்படும் தோஷம் இது. இதனால் ஆயுள், உடல்நலம் பாதிக்க கூடும்.   தாய், தந்தை, தாய்மாமனுக்கு பாதிப்பு ஏற்படலாம். ஆனால் குருவின் பார்வை ஏற்பட்டால் தோஷம் மறையும். இதிலிருந்து விடுபட முருகப்பெருமானுக்கு பரிகார பூஜை செய்யலாம். குழந்தையின் ஜென்ம நட்சத்திரத்தைச் சொல்லி அர்ச்சனை செய்து, பெற்றோர் குழந்தையுடன் மூன்று முறை சன்னதியை வலம் வரவேண்டும். அப்போது பின்வரும் கந்தரனுபூதி பாடலை 12 முறை  சொல்வது நல்லது.""உருவாய் அருவாய் உளதாய் இலதாய்மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்கருவாய் உயிராய் கதியாய் விதியாய்குருவாய் வருவாய் அருள்வாய் குகனே  கொடிமரத்தின் முன்போ அல்லது சன்னதி முன்போ குழந்தையை தரையில் கிடத்தி, முருகனுக்கு தத்து கொடுப்பதாக எண்ணி வழிபட வேண்டும். பின், கோயில் அர்ச்சகர் பிள்ளையை எடுத்துக் கொடுக்க, பெற்றோர் பெற வேண்டும். அந்தக் காலத்தில் அர்ச்சகருக்கு தட்சணையாக  ஒரு படி தவிடு கொடுப்பது வழக்கம்.  பிள்ளைக்கும் சிலர் "தவிடன் என்று பெயரிடுவதும் உண்டு. நாளடைவில் இப்பழக்கம் மறைந்து, தட்சணை அளிக்கும் வழக்கம் வந்தது. இப்பரிகாரத்தின் மூலம் தோஷம் நீங்குவதோடு, முருகனருளால் குழந்தையின் ஆயுள், ஆரோக்கியம் கூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !