உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலுாரில் ஸ்ரீகோடி காயத்ரி ஜப யக்ஞ நிறைவு ஹோமம்

கடலுாரில் ஸ்ரீகோடி காயத்ரி ஜப யக்ஞ நிறைவு ஹோமம்

கடலுார்: கடலுார் ஸ்ரீகோடி காயத்ரி ஜபயக்ஞ கமிட்டி சார்பில் ஸ்ரீகோடி காயத்ரி ஜபயக்ஞ நிறைவு ஹோமம் நடந்தது. கடலுார் மரியசூசை நகரில் உள்ள ஸ்ரீகோடி காயத்ரி ஜபயக்ஞ கமிட்டி சார்பில்,ஆண்டுதோறும் மழை வேண்டி மற்றும் உலக அமைதி வேண்டி ஸ்ரீகோடி காயத்ரி ஜபயக்ஞ ஹோமம் நடத்தப்பட்டு வருகிறது. 18 ம் ஆண்டு  ஸ்ரீகோடி காயத்ரி ஜபயக்ஞ ேஹாமம் கடந்த ஜனவரி 14ம் தேதி பொங்கல் அன்று துவங்கி தினசரி 1008 முறை காய்த்ரி ஜபம் செய்யப்பட்டது. இதன் நிறைவு ஹோமம் நேற்று கடலுார்,திருப்பாதிரிப்புலியூர் சங்கர பக்த ஞான சபாவில் நடந்தது. அதில் 39 லட்சம் காயத்ரி மந்திரம் ஜெபிக்கப்பட்டது. மேலும் பெண்களுக்காக காயத்ரி மாதா பூஜையும் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை டாக்டர் வாசுதேவன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !