சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் பிரம்மோற்சவ விழா
ADDED :2694 days ago
செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்று விழா நடந்தது. செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில், 10 நாள் பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் துவங்கியது. இதை முன்னிட்டு 8ம் தேதி மாலை 6:00 மணிக்கு விக்னேஷ்வரர் அங்குரார்பணம் நடந்தது. நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். காலை 8:00 மணிக்கு கொடிமரத்திற்கு விசேஷ பூஜைகள் செய்து கருட கொடியேற்றினர். தொடர்ந்து சாமி கோவி லில் இருந்து புறப்பட்டு மலையடிவாரம் வந்தது. பின்னர் சந்திரபிரபையில் சாமி வீதியுலா நடந்தது. இரவு ஹம்சவாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது. இந்து சமய அறநிலையத்துறையினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.