சென்னசமுத்திரத்தில் கும்பாபிஷேக விழா
ADDED :2689 days ago
கொடுமுடி: கொடுமுடி, சென்னசமுத்திரம் கிராமம், ராமநாதபுரத்தில் சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. முன்னதாக கடந்த, 9ல் முதற்கால யாக சாலை வழிபாடு, கோபுர கலசம் வைத்தல் நடந்தது. மறுநாள் இரண்டாம் கால யாக பூஜை, கலச புறப்பாடு நடந்தது. நேற்று காலை, 11 மணிக்கு கோபுர கும்பாபிஷேகம், அதைதொடர்ந்து ஐயப்ப சிவாச்சாரியர் சர்வ சாதகத்தில் சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அதையடுத்து மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.