உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் சிலைகள் உயரம், எடை அளவீடு பணிகள் தீவிரம்

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் சிலைகள் உயரம், எடை அளவீடு பணிகள் தீவிரம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சிலைகளின் உயரம், எடை அளவீடு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், இணை ஆணையராக இருந்த ஜெகன் நாதன், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதிய இணை
ஆணையராக ஞானசேகர் அறிவிக்கப்பட்டார். இவர், சுவாமி நகை மற்றும் உற்சவ மூர்த்தி சிலைகள் குறித்து கணக்கீடு செய்த பின்னரே, பொறுப்பு ஏற்க முடிவு செய்தார். அதன்படி,
அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள, 139 சிலைகள் மற்றும் ஆதி அருணாசலேஸ்வரர் கோவில், சோமாசிபாடி சுப்ரமணியர் கோவில், துர்க்கையம்மன் கோவில்களில் உள்ள உற்சவ மூர்த்தி சிலைகளையும் கணக்கீடு செய்யப்பட உள்ளது. இதில், சிலைகளின் உயரம், எடை, அகலம் ஆகியவற்றை அளவீடு செய்யும் பணி தொல்பொருள் துறை வல்லுனர் சேகர் தலைமையில் நடந்து

வருகிறது. நேற்று (ஜூன் 11), 85 சிலைகள் கணக்கீடு செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள சிலைகள் இன்று (ஜூன் 12) கணக்கீடு செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !