பழநி முருகன்கோயிலில் சித்தர் போகர் ஜெயந்தி விழா
ADDED :2741 days ago
பழநி: பழநி முருகன்கோயிலில் போகர் ஜெயந்தியை முன்னிட்டு, அவர் வணங்கிய பச்சை மரகத லிங்கம், புவேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது.
பழநி முருகன் மலைக்கோயில் நவபாஷாண மூலவர் முருகனை வடிவமைத்த, சித்தர் போகர் வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் அவதரித்தார். மலையில் அவர் ஜீவசமாதி அடைந்தார். நேற்று (ஜூன் 11) வைகாசி, பரணி நட்சத்திரத்தை முன்னிட்டு, மலைக்கோயிலில் உள்ள போகர் சன்னதியில், அவர் வணங்கிய பச்சை மரகதலிங்கம், புவனேஸ்வரியம்மனுக்கு பால், பழங்கள், பன்னீர், விபூதி உள்ளிட்ட 16வகையான அபிஷேகங்கள் செய்து தீபாராதனை நடந்தது.
புலிப்பாணிஆசிரம நிர்வாகிகள், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பழநி ஞானதண்டாயுத பாணிசுவாமி பக்தர் பேரவை சார்பில், மாலையில்அடிவாரம் பகுதியில் குருபோகர் ரத ஊர்வலம் நடந்தது.