திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்
ADDED :2704 days ago
ஓசூர்: சூளகிரி அருகே உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த, பந்தர குட்டை கிராமத்தில், திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 18 நாட்களுக்கு முன், மகாபாரத விழா துவங்கியது. தினமும், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மகாபாரத சொற்பொழிவு, தெருக்கூத்து நாடகங்கள் நடந்தன. 18வது நாளான நேற்று காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில், துரியோதனன், பீமன் சண்டையில், துரியோதனன் இறப்பது போல், நாடகக்குழுவினர் நடித்தனர். பலவதிம்மனப்பள்ளி, சின்னாறு, பந்தரகுட்டை உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், படுகளம் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.