உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமர் சுவாமி கோவில் மண்டலாபிஷேக பூஜை

ராமர் சுவாமி கோவில் மண்டலாபிஷேக பூஜை

ஓசூர்: கெலமங்கலம் அருகே உள்ள, ராமர் கோவிலில் நடந்த மண்டலாபி?ஷக பூஜையில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, கெலமங்கலம் அடுத்த, பொம்மதாத்தனூர் அருகே உள்ள, ரத்தினகிரி மலை அடிவாரத்தில், சீதா, லட்சுமண, அனுமான் சமேத ராமர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில், உமாபதி சுவாமிகள் தலைமையில், பல லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு, கடந்த, ஏப்ரல், 27ல் கும்பாபி?ஷகம் நடந்தது. 48வது நாள் மண்டலாபி?ஷக பூஜை நேற்று முன்தினம் துவங்கியது. அன்று காலை, 9:30 மணிக்கு, 108 கலச ஸ்தாபனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. பகல், 12:00 மணிக்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமி சிலைக்கு, 108 கலச அபி?ஷகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. அதைத்தொடர்ந்து, பொம்மதாத்தனூர், பேவநத்தம், ரத்தினகிரி, போடிச்சிப்பள்ளி, ஜெக்கேரி, பிதிரெட்டி உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து, பக்தர்கள், மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !