திருவண்ணாமலை அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :2785 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு, 27வது ஆண்டாக, மஹா அபிஷேகம் நடந்தது. இதில், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் உற்சவ மூர்த்திக்கு, 1,008 லிட்டர் பால், தலா, 108 லிட்டர் நெய், தேன், மற்றும் பஞ்சாமிர்தம், மூலிகைப் பொடி, இரண்டு டன் பூக்கள், 108 கிலோ விபூதி உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு, சிறப்பு யாக சாலை பூஜை அமைக்கப்பட்டு, இதில் வைக்கப்பட்ட புனித கலசநீரை கொண்டு, உற்சவ மூர்த்திகளுக்கு, சிறப்பு அபி?ஷகம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.