உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) எதிர்பாராத வருமானம்

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) எதிர்பாராத வருமானம்

வெள்ளை மனதால் கொள்ளை கொள்ளும் மீன ராசி அன்பர்களே!

இந்த மாதம் செவ்வாய், கேது நன்மைகளை தருவார்கள். புதன் ஜூன் 24 வரை நன்மை வாரி வழங்குவார். சுக்கிரன் ஜூலை 5 வரை 5-ம் இடத்தில் இருப்பது  மிக உயர்வான நிலை. செயலில் வெற்றி உண்டாகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணப் புழக்கம் சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை நன்றாக இருக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகமுண்டாகும்.  குடும்பத்தில் சுக்கிரனால் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.

நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மனதில் பக்தி எண்ணம் மேலிடும். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை உருவாகும்.  ஜூலை 5,6,7ல் பெண்களால் நன்மையை எதிர்பார்க்கலாம். ஜூன்30, ஜூலை 1ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஜூலை 12,13ல் அவர்கள் வகையில் இருந்து சற்று ஒதுங்கி இருக்கவும். ஜூன் 24க்கு பிறகு குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம். வீண் அலைச்சல் அதிகரிக்கும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும்.


தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு மாத முற்பகுதியில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும். உங்கள் திறமைக்கு ஏற்ப மரியாதை கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் வந்து சேரும். ஜூன் 24க்கு பிறகு வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிட லாம். சிலர் இடமாற்றத்தை சந்திக்கலாம். ஜூன் 27,28,29ல் எதிர்பாராத வருமானம் கிடைக்க யோகமுண்டு. உங்கள் அதிகாரம் கொடி கட்டிப் பறக்கும்.தொழில், வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.

கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். புதிய தொழில் முயற்சியில் வெற்றி கிடைக்கும். கோயில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். ஜூன் 24க்கு பிறகு பகைவர்களால் இடையூறு வரலாம். வீண் அலைச்சல் அதிகரி க்கும். தொழில் ரீதியாக சிலர் வெளியூர் பயணம் செல்ல நேரிட லாம். ஜூலை 2,3,4,7,8ல் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். ஜூன் 18,19,20, ஜூலை 16 ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கப் பெறுவர்.

கலைஞர்கள் சிறப்பான வாழ்வு அமையப்  பெறுவர். எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். சிலர் அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கப்  பெறுவர். ஜூலை 5க்கு பிறகு முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படலாம். அரசியல்வாதிகள், பொதுநலத் தொண்டர்கள் நல்ல வளர்ச்சி காண்பர். ஜூன் 16,17, ஜூலை14,15ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர். கடந்த காலத்தில் இருந்த பின் தங்கிய நிலை மறையும். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். ஜூன் 24க்கு பிறகு புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சக மாணவர்களிடம் கவனம் தேவை. சிரத்தை எடுத்து படிப்பது நல்லது.

விவசாயிகள் எதிர்பார்த்த மகசூலை பெறுவர். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நற்பலன் கிடைத்துக் கொண்டே இருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும்.
வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவு  அமைய வாய்ப்பு உண்டு. கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். பக்கத்து நிலக்காரர்கள் வகையில் இருந்த தொல்லை மறையும்.

பெண்கள் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். வாழ்வில் குதூகலம் அதிகரிக்கும்  கணவரின் அன்பும், அரவணை ப்பும் கிடைக்கும். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு அரசிடம் எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும். தோழிகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.

ஜூன் 24க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவைப்படும். ஜூன் 21,22ல் அனுகூலமான பலனைக் காணலாம்.

விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரவழியில் பணஉதவி  கிடைக்கும்.  

* நல்ல நாள்: ஜூன் 18,19,20,21,22,27,28,29,30, ஜூலை 1,5,6,7,9,10,11,16
* கவன நாள்: ஜூன்23,24 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1, 7  நிறம்: வெள்ளை, சிவப்பு

* பரிகாரம்:

● வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு
● வெள்ளிக்கிழமை லட்சுமிக்கு நெய் விளக்கு
● சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !