விருதுநகர் அந்தோணியார் திருவிழா
ADDED :2740 days ago
விருதுநகர், விருதுநகர் மல்லாங்கிணர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அந்தோணியார் திருவிழா தேர்பவனியுடன் நடந்தது. ஜூன் 11 ல் துவங்கிய விழாவில் விருதுநகர் பாண்டியன்நகர் பாதிரியார் மைக்கேல், துணைாதிரியார் ஜெயராஜ், பெங்களூரு டேவிட் வின்சென்ட் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது. இதைதொடர்ந்து சிறப்பு திருப்பலி, மறையுரை நடந்தன. மூன்றாம்நாள் விருதுநகர் எஸ்.எப்.எஸ். பள்ளி முதல்வர் அருள் பிரான்சிஸ், பாதிரியார்கள் மைக்கேல், ஜெயராஜ் தலைமையில் திருவிழா திருப்பலி, தேர்பவனி நடந்தன.