உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒடிசா, புரி ஜெகனாதர் கோயில் கருவறை சாவிகள் கண்டெடுப்பு

ஒடிசா, புரி ஜெகனாதர் கோயில் கருவறை சாவிகள் கண்டெடுப்பு

புவனேஸ்வரம்: ஒடிசா மாநிலம் புரி ஜெகநாதர் கோயில் கருவூல அறையின் சாவிகள் கண்டெடுக்கப்பட்டன.ஒடிசா மாநிலத்தில் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புரி ஜெகனாதர் கோயிலில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர ஆபரணங்கள், காணிக்கை பொருட்கள் வைக்கப்பட்டுள்ள கருவூலத்தின் உள்அறையில் நான்கு சாவிகள் கடந்த மாதம் 4-ம் தேதி முதல் காணமால்போயின. சாவியை தேடி கண்டுபிடித்திடஒய்வு பெற்ற நீதிபதியை முதல்வர் நவீன்பட்நாயக் நியமித்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பெட்டக அறையில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில் மாற்று சாவிகள் கிடைத்துள்ளதாக புரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அகர்வால் தெரிவித்துள்ளார். கடவுளின் கிருபையால் மாற்றுச்சாவிகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !