கன்னலத்தில் அக்னி வசந்த விழா
ADDED :2702 days ago
அவலுார்பேட்டை: கன்னலத்தில் அக்னி வசந்த விழா நடந்தது. மேல்மலையனுார் தாலுகா, கன்னலம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா, கடந்த 20 ம் தேதி துவங்கியது. இதையொட்டி, தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடந்தது. நேற்று மதியம் துரியோதனன் படுகளமும், மாலையில் தீ மிதி விழாவும் நடந்தது. இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.