நாவலடி கருப்பண்ணசுவாமி கோவில் குடமுழுக்கு விழா கோலாகலம்
நாமக்கல்: நாவலடி கருப்பண்ணசுவாமி கோவிலில் நடந்த கும்பாபி ?ஷக விழாவில், 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்டம், மோகனூரில், பிரசித்தி பெற்ற நாவலடி கருப்பண்ண சுவாமி கோவிலில், மிகுந்த பொருட்செலவில், ராஜகோபுரம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல், காளியம்மன், மாரியம்மன், அரண்மனை சாவடி விநாயகர், சிவன் கோவில் நுழைவு வாயில் முன் உள்ள விநாயகர் கோவில்களிலும், திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. கும்பாபி ?ஷகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த, 13ல் கிராம சாந்தி பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது.
தொடர்ந்து, நவக்கிரகம், லட்சுமி ?ஹாமம், காவிரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், கோபுரங்களுக்கு கலசம் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜை, கடம் புறப்பாடு; 5:30 மணிக்கு, அரண்மனை சாவடி விநாயகர், மணியன் குல, கண்ணந்த குல விநாயகர் கோவில்களுக்கு கும்பாபி ?ஷகம் நடந்தது. காலை, 6:30 மணிக்கு, காளியம்மன் கோவில், ராஜகோபுரம், பரிவார கோபுரங்கள்; 8:00 மணிக்கு, மாரியம்மன் கோவில்; 9:40 மணிக்கு, செல்லாண்டியம்மன், நாவலடியான் கருப்பண்ண சுவாமி கோவில் ராஜகோபுரத்துக்கு மகா கும்பாபி ?ஷகம் கோலாகலமாக நடந்தது. அப்போது, ?ஹலிகாப்டரில் இருந்து, பூக்கள் தூவப்பட்டன. மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.எல்.ஏ., பாஸ்கர் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர். திருச்சி, கரூர், நாமக்கல் மாவட்டங்களிலிருந்து, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். கோவை மண்டல ஐ.ஜி., பாரி, டி.ஐ.ஜி., செந்தில்குமார், எஸ்.பி., அருளரசு தலைமையில், 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முக்கிய பகுதிகளில், 220, ’சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஏற்பாடுகளை, பரம்பரை அறங்காவலர் குழு மற்றும் ஆலயத்திருப்பணிக்குழு செய்திருந்தனர்.