திருவண்ணாமலையில் 60 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை
ADDED :2747 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த, நார்த்தாம்பூண்டி கிராமத்தில், 60 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, இதன் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. நேற்று முன்தினம், அனுக்ஞை, மிருத்சங்கரணம், வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம், கலச ஸ்தாபனம், முதல்கால யாக பூஜை செய்யப்பட்டது. நேற்று காலை, இரண்டாம் கால யாக பூஜை நடத்தப்பட்டு, புனித கலச நீரை, ராட்சத கிரேன் மூலம், 60 அடி உயர ஆஞ்சநேயர் சிலையில் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.