கணபதி கோவில் கும்பாபிஷேகம்
                              ADDED :2691 days ago 
                            
                          
                          கோவை;சிங்காநல்லுார் வல்லப கணபதி கோவில் மகா கும்பாபிஷேக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது.சிங்காநல்லுார் பாலசுந்தரம் லே அவுட்டில் உள்ள, வல்லப கணபதி கோவிலில் வல்லப விநாயகர் பிரதிஷ்டையும், மகா கும்பாபிஷேக விழாவும் நேற்று நடந்தது. நேற்று முன்தினம் வாஸ்துசாந்தி, கோபுர கலச பிரதிஷ்டை, கோ பூஜை உள்ளிட்ட நிகழ்வுகளுடன் விழா துவங்கியது. நேற்று இரண்டாம்கால யாக சாலை பூஜைகளுடன், தீபாராதனை, அருட் கலசங்கள் வலம் வருதல் ஆகிய நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.