உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலுார் கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம்

மேலுார் கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம்

மேலுார்:மேலுார் அருகே மேலவளவில் சோமகிரி கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஜூன் 15ல் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்க ளுக்கு புனித நீர் ஊற்றினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. டி.எஸ்.பி., சக்கரவர்த்திதலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காடுபட்டிசோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு செல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம்நடந்தது. சிவாச்சாரியார் சேவற்கொடியோன் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடந்தன. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.

அலங்காநல்லுார்: பாலமேட்டில் சாத்தாவுராயன், காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக விநாயகர், முருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடந்தது. பின் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பாலமேடு 24 மனை தெலுங்குபட்டிசெட்டி உறவின்முறை சங்க நிர்வாகிகள், விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !