உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெகந்நாதர் கோவிலில் வரும் 23ல் கொடியேற்றம்

ஜெகந்நாதர் கோவிலில் வரும் 23ல் கொடியேற்றம்

திருவள்ளூர் : திருமழிசை, ஜெகந்நாத பெருமாள் கோவில் மற்றும் பக்திஸார் எனும் திருமழிசை ஆழ்வார் கோவிலில், ஆனி பிரம்மோற்சவ விழா, வரும் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முன்னதாக, வரும் 22ம் தேதி, மாலை, அங்குரார்பணத்துடன் ஆனி பிரம்மோற்சவ திருவிழா துவங்குகிறது. அதன் பின், மறுநாள், காலை, 7:30 மணி முதல், 8:30 மணிக்குள், துவஜாரோகனம் (கொடியேற்றம்) நடைபெறும். அன்று மாலை, பெருமாள் மலர் அலங்காரத்தில், தங்க தோளுக்கினியானில் வீதி புறப்பாடு நடைபெறும். திருவிழா காலங்களில், காலை மற்றும் மாலை வேளைகளில் பலவகையான வாகனங்களில் ஜெகந்நாத பெருமாள் வீதியுலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை, 25ம் தேதியும், தேரோட்டம், 29ம் தேதியும் நடைபெறும்.

நாள்    நேரம்    நிகழ்ச்சி

ஜூன் 24    காலை, 9:00 மணி    திருமழிசை ஜெகந்நாதர் தங்கதோளுக்கினியான் மாலை, 7:30 மணி திருமழிசை ஜெகந்நாதர் தங்கதோளுக்கினியான்
25    காலை, 9:00 மணி    கருட சேவை     மாலை, 7:30 மணி    அனுமந்த வாகனம்
26    காலை, 9:00 மணி    சேஷ வாகனம்     மாலை, 7:30 மணி    சந்திரபிரபை
27    காலை, 9:00 மணி    மோகினி அவதாரம்     மாலை, 7:30 மணி    சிம்ம வாகனம்
28    காலை, 9:00 மணி    சூர்ணாபிஷேகம்     மாலை, 7:30 மணி    தங்க தோளுக்கினியான்
29    காலை, 9:00 மணி    திருத்தேர்     மாலை, 7:30 மணி    மாட வீதி உற்சவம்
30    காலை, 9:00 மணி    திருமழிசை ஜெகந்நாதர் தங்கதோளுக்கினியான்    மாலை, 7:30 மணி    குதிரை வாகனம்

ஜூலை 1    காலை, 9:00 மணி    தீர்த்தவாரி உற்சவம் மாலை, 7:30 மணி கொடியிறக்கம்
2    மாலை, 7:30 மணி    புஷ்ப யாகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !