உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காணிக்கை பொருட்கள் பெற கட்டுப்பாடு : முறைகேடை தடுக்க அறநிலையத் துறை முயற்சி

காணிக்கை பொருட்கள் பெற கட்டுப்பாடு : முறைகேடை தடுக்க அறநிலையத் துறை முயற்சி

முறைகேடுகளை தடுக்கும் வகையில், கோவில்களுக்கு, பக்தர்கள் மற்றும் உபயதாரர்கள், விலை மதிப்புள்ள காணிக்கை பொருட்களை வழங்க, அறநிலையத் துறை கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது. கோவில்களின் சொத்துகளை முறைப்படுத்தி, கணினியில் பதிவு செய்து, ஆவணப்படுத்தும் பணி, சில மாதங்களாக நடந்து வருகிறது.இந்தப் பணியின் போது, பல கோவில்களில் முறைகேடுகள் நடந்துள்ளது கண்டறியப்பட்டதால், அறநிலையத் துறை அதிர்ச்சி அடைந்துள்ளது. இதையடுத்து, முறைகேடுகளை தடுக்கும் வகையில், கோவில்களுக்கு வழங்கப்படும் விலை உயர்ந்த காணிக்கை பொருட்களை பெற, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது: l நகைகள் எங்கு வாங்கப்பட்டது, அதன் எடை, ரசீது, நகையில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் விபரம், அவற்றின் மதிப்பு, யாரால் செய்யப்பட்டது என்பது போன்ற விபரங்களை பெற வேண்டும்l    கற்கள் பதித்த ஆபரணங்கள் என்றால், பதிக்கப்பட்டுள்ள கற்களின் தரம், எண்ணிக்கை, எடை மதிப்பு குறித்த நிபுணர்களின் சான்று அவசியம்l    மோதிரம், வளையல், நெக்லஸ், கவசங்கள் என்றால், அப்பொருட்களின் உட்பாகங்களில், பதிவேடு எண், கோவிலின் பெயர், உபயதாரர் பெயர், வழங்கிய தேதி போன்றவற்றை பதிவு செய்திருக்க வேண்டும்l    காணிக்கை நகைகளை செய்தவரின் பெயர், முகவரி, ஆதார் எண், அலைபேசி எண்ணுடன் கூடிய ரசீது வழங்க வேண்டும். கடையில் வாங்கி இருந்தால், கடையின் ரசீது வழங்க வேண்டும்l    உபயதாரரோ, அவரால் நியமிக்கப்பட்ட முகவரோ தகுந்த ஆதாரங்களுடன் வழங்கினால் மட்டுமே, காணிக்கை பொருட்கள் பெற வேண்டும்.    மூன்றாம் நபரிடம், காணிக்கை பொருட்களை பெறக்கூடாது என, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இந்த கட்டுப்பாடுகள் குறித்த விபரங்களை உபயதாரர்கள், பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், அனைத்து கோவில்களிலும் அறிவிப்பு செய்து, வளாகத்தில் ஒட்டப்பட்டு வருகிறது.  இவ்வாறு அதிகாரிகள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !