விருபாட்சீஸ்வரர் கோவில் கொடிமரம் நிலை நிறுத்தும் விழா
ADDED :2689 days ago
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த, சேவூர் கிராமத்தில் விசாலாட்சி அம்பிகை, உடனுறை விருபாட்சீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் திருப்பணிக்காக, அறநிலையத் துறை சார்பில், 43 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடக்கின்றன. இக்கோவிலில், வரும், 25ல், கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதையொட்டி, கோவிலில் புதியதாக செய்யப்பட்ட, 30 அடி உயர கொடிமரம் நிலை நிறுத்தும், விழா நேற்று நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.