வள்ளலார் மன்றத்தில் ஆனிமாத பூச விழா
ADDED :2689 days ago
சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் ஆனி மாத பூச விழா நடந்தது. மன்ற பொருளாளர் முத்துகருப்பன் தலைமை தாங்கினார். மன்ற துணை செயலாளர் பாலசுப்ரமணியன், ரோட்டரி முன்னாள் தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி அமைப்பாளர் விஜயசாமுண்டீஸ்வரி வரவேற்றார். மன்ற பூசகர்கள் சிவஞான அடிகள், கமலநாதன் அடிகள் முன்னிலையில் அகவல் படித்து, மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அனைத்து வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் நடேசன், வேலு, கார்த்திகேயன், அர்ச்சனா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். சிறப்பு ஜோதி தரிசனத்தை தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ரவிராஜ் நன்றி கூறினார்.