நான்கு தாயார் தரிசனம்
ADDED :2702 days ago
பங்குனி உத்திரநாளில் அழகர்கோவில் பெருமாளுக்கு திருக்கல் யாண வைபவம் நடக்கும். அன்று காலையில் அழகர் ஸ்ரீதேவி, பூமிதேவி, ஆண்டாள், கல்யாண சுந்தரவல்லி ஆகிய நான்கு தாயார்களுடன் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு பெருமாளுக்கு நான்கு தாயார்களுடன் திருமண வைபவம் நடந்தேறும். அதன்பின் சுவாமி, தாயார்களுடன் பூப்பல்லக்கில் கோயிலுக்கு திரும்புவார். அன்று ஒருநாள் பெருமாளை நான்கு தாயார்களுடன் தரிசிக்கலாம்.