நமக்காக பிறந்தவர்கள்!
ADDED :2705 days ago
உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இல்லாமல், தன் நிலையிலிருந்து கடவுள் நமக்காக இறங்கி வருவதை அவதாரம் என்கிறோம். திருமால், ராமனாக அவதாரம் செய்து, மனிதர்களோடு மட்டுமில்லாமல், வேடர், குரங்கு, பறவை என அனைத்து உயிர்களுடன்பழகினார்.திருமங்கையாழ்வார் தன் பாடலில், கங்கைக் கரையில் குகனுக்கு அருள்புரிந்ததைப் போல, தனக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டுகிறார். அவர் கிருஷ்ணனாக அவதாரம் எடுத்து வேலைக்காரனாகவும் இருந்துள்ளார். அர்ஜுனனுக்கு தேர் ஓட்டியுள்ளார். பாண்டவர்களுக்காக துõது சென்றார். கோகுலத்தில் அவரது பாலலீலைகளைக் கண்டு, மற்ற சிறுவர்கள் பயந்து விலகிய போது, “என்னைக் கண்டு அஞ்சாதீர்கள்.உங்களில் நானும் ஒருவனே!” என்று சொல்லி பழகினார். நிஜமான பக்தி இருந்தால், நம் கட்டளைக்கு ஆண்டவனும் கட்டுப்படுவார்.