உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருங்குளத்தில் ஆடும் பெருமாள்!

பெருங்குளத்தில் ஆடும் பெருமாள்!

சிவபெருமான் சிதம்பரத்தில் நடனமாடுவது போல, பெருமாள் நடனமாடும் தலம் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள பெருங்குளம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில். நவதிருப்பதி மற்றும் 108 திவ்யதேசங்களில் ஒன்றான இக்கோயில், திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ., துõரத்தில் உள்ளது. உற்சவர் மாயக் கூத்தர், தாயார்கள் அலர்மேல் மங்கை, குளந்தைவல்லி இங்கு அருள்பாலிக்கின்றனர். இங்கிருந்த தடாகவனத்தில் வேதசாரன் என்ற அந்தணர், மனைவி வேதவல்லியுடன் வசித்தார். குழந்தை இல்லாத அவர்கள், இப்பெருமாளை மனமுருகி வேண்ட அவர்களுக்குப் பெண்குழந்தை பிறந்தது. கமலாவதி என்று பெயரிட்டனர். அப்பெண் விஷ்ணுவையே கணவனாகப் அடைய வேண்டும் என்று தவம் செய்தாள்.  பெருமாளும் அவள் அன்பை ஏற்று மணம் புரிந்து கொண்டார். இங்குள்ள வனத்தில் அம்மசாரன் என்ற அசுரன் இருந்தான். இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமாள் பல மாயங்கள் செய்து, நாட்டியமாடி அவனை சம்ஹாரம் செய்தார். கூத்தாடியதால் இப்பெருமாளுக்கு ‘மாயக்கூத்தன்’ என்ற பெயர் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !