திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டி விழா
ADDED :2986 days ago
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர், புஷ்பம், தயிர், விபூதி, திருமஞ்சணம் உள்ளிட்ட அபிேஷகங்கள் நடந்தது. அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு மகா தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் தண்டபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.