உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் அருள்பாலிப்பு

வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் அருள்பாலிப்பு

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி உற்சவர் நடராஜர், சிவகாமசுந்தரி சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆனி திருமஞ்சன உற்சவத்தையொட்டி, நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு உற்சவர் நடராஜர், சிவகாமசுந்தரி சுவாமிகளுக்கு 108 ஹோமம், 21 வகையான மூலிகைகளால் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. தொடர்ந்து, உற்சவர் நடராஜர், சிவகாமசுந்தரி சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !