பழநியில் பலத்த காற்று வீசுவதால் ‘ரோப்கார்’ இயங்குவதில் சிக்கல்
ADDED :2697 days ago
பழநி: பழநி பகுதியில் பலத்த காற்று காரணமாக மலைக்கோயில் ரோப்கார் தொடர்ந்து இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக மலைக் கோயில்களில், பழநிமுருகன் கோயிலில் தான் ரோப்கார் சேவை உள்ளது. அதன் மூலம் 3 நிமிடங்களில் மலைக்கு பக்தர்கள் சென்று, வருகின்றனர். பலத்த மழை, காற்று வீசினால் பக்தர்கள் பாதுகாப்பு கருதிரோப்கார் நிறுத்தப்படும். கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசுகிறது.நேற்றும் சாரல் மழையுடன், காற்று வீசியதால் ரோப்கார் சேவை பாதித்தது. காற்று குறைந்த நேரங்களில் மட்டும் இயங்கியது. இதனால் ரோப்காரில் பயணம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். வின்ச் ஸ்டேஷனில் நீண்டநேரம் காத்திருந்து சிரமப்பட்டனர்.