எல்.ஆர்., பாளையம் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2700 days ago
கண்டமங்கலம்: லிங்காரெட்டிப்பாளையம் கிராமத்தில் பெரியபாளையத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கண்டமங்கலம் ஒன்றியம், கெங்கராம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட லிங்காரெட்டிப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள, விநாயகர், முருகர், கெங்கையம்மன், பெரியபாளையத்தம்மன் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, புதுப்பிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த 20ம் தேதியன்று, யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை 9:00 மணிக்கு, கடம் புறப்பாடாகி, விநாயகர், முருகர், கெங்கையம்மன், பெரியபாளையத்தம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.