உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயில் ரத வீதிகளில் வாகனங்களை அனுமதிக்க வழக்கு

ராமேஸ்வரம் கோயில் ரத வீதிகளில் வாகனங்களை அனுமதிக்க வழக்கு

மதுரை, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ரதவீதிகள் மக்கள் நலச் சங்கம் செயலாளர் தில்லைபாக்கியம். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்தாக்கல் செய்த பொதுநல மனு:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலைச் சுற்றி ரத வீதிகள் உள்ளன. தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதாக சில ஆண்டுகளுக்குமுன் போலீசார் ரத வீதிகளில் வாகன போக்குவரத்தை தடை செய்தனர். ஆனால், வி.ஐ.பி.,கள் வாகனங்கள் செல்லஅனுமதிக்கின்றனர். மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் நடந்து கோயிலுக்குச் செல்ல சிரமப்படுகின்றனர். வாகனபோக்குவரத்தை தடை செய்ய காவல்துறைக்கு அதிகாரம் இல்லை. அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது. ரத வீதிகளில் வாகனபோக்குவரத்தை அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது அமர்வு ராமநாதபுரம் எஸ்.பி.,ராமேஸ்வரம் நகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டு, ஜூன் 27க்கு ஒத்திவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !