மதுரை முக்தீஸ்வரர் கோயிலில் ரிஷப வாகனத்தில் சுவாமி உலா
ADDED :2682 days ago
மதுரை: மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் பிரதோசத்தை முன்னிட்டு சுவாமி ரிஷப வாகனத்தில் கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தெப்பக்குளத்தின் மேற்கு கரையில் மரகதவல்லி சமேத முக்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நேற்று பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.