காசிவிஸ்வநாதர் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :2687 days ago
வாழப்பாடி: வாழப்பாடி, காசிவிஸ்வநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில் வளாகத்திலுள்ள நந்திக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், தேன், பழ வகைகளால் சிறப்பு அபி?ஷகம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. மூலவர் மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். கோவில் வளாகத்தை சுற்றிலும், மேள தாளம் முழங்கிட, ரிஷப வாகனத்தில், நடராஜர்-அம்பாள் வலம் வந்தனர். இதேபோல, பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில், பெத்தநாயக்கன்பாளையம் ஆட்கொண்டேஸ்வரர், ஏத்தாப்பூர் சாம்பமூர்த்தீஸ்வரர் கோவில், கல்யாணகிரி தேன்மலை சிவாலயம், கொட்டவாடி, பேளூர் கரடிப்பட்டி கருணாகரேஸ்வரர் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.