நவபாஷாணத்தில் எரியாத ைஹமாஸ் விளக்கு
                              ADDED :2687 days ago 
                            
                          
                          தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரையில் ைஹமாஸ் விளக்கு எரியாததால் பக்தர்கள் சிரமமடைந்து வருகின்றனர். தேவிபட்டினத்தில் பிரசித்திபெற்ற நவபாஷாணம் அமைந்துள்ளதால் பரிகார பூஜைகள் செய்வதற்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடற்கரை எதிரே ஊராட்சி பொதுநிதியில் இருந்து சுமார் 4.35 லட்சம் மதிப்பீட்டில் உயர் கோபுர மின்விளக்கு ( ைஹமாஸ் ) அமைக்கப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக விளக்கு எரியவில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.