சிவாலய வழிபாட்டில் தட்சிணாமூர்த்தி, காலபைரவர் வழிபாடு முக்கியமா?
ADDED :2775 days ago
ஒரு கோவிலுக்குச் சென்றால் இது முக்கியம், அது முக்கியம் என்ற என்ற குழப்பமே கூடாது. ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு விதமான பலன் வழங்குவர். மின்சாரம் ஒன்றுதான். நாற்பது வாட்ஸ் பல்பில் இணைப்புகொடுத்தால் அதற்கான ஒளி மட்டும் வழங்குகிறது. மின் விசிறியானால் காற்று வீசுகிறது. ‘டிவி’யில் படம் காட்டுகிறது. இது போல தெய்வ சக்திகளும் மாறுபட்ட பலன் தரும். தட்சிணாமூர்த்தி அறிவையும், பைரவர் பயத்தை அகற்றியும் அருள் செய்வர். எனவே எல்லா தெய்வங்களையும் வழிபட்டு முழுமையான பலன் பெற வேண்டும்.