ஜூலை 4ல் நரசிம்மர் பிரம்மோற்சவம்
ADDED :2698 days ago
நரசிங்கபுரம்: பேரம்பாக்கம் அடுத்துள்ள நரசிங்கபுரத்தில் உள்ளது மரகதவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில். இந்தக் கோவிலில், இந்த ஆண்டு ஆனி பிரம்மோற்சவம், ஜூலை 4ம் தேதி, அங்குரார்பணத்துடன் துவங்குகிறது. அதன் பின், மறுநாள் காலை, 7:30 மணிக்கு மேல், 8:30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும். ஜூலை, 7ம் தேதி கருடசேவையும், ஜூலை, 11ம் தேதி திருத்தேரும், ஜூலை, 15ம் தேதி விடையாற்றி உற்சவமும் நடைபெறும்.