வலக்கட்டுசாமி கருப்பசாமி கோயில் வருஷாபிஷேகம்
ADDED :2698 days ago
ராஜபாளையம்:ராஜபாளையம் அய்யனார் கோயில் ரோட்டில் உள்ள ஸ்ரீ வலக்கட்டு கருப்பசாமி கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு சப்த கன்னியர், லாவ சன்யாசி, பெருமாள், விக்னஷே்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. சிறப்பு நிகழ்ச்சியாக ஆயிரம் லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது. சுற்று வட்டரா பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் வழிபட்டு சென்றனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை ராஜபாளையம் சிந்தலபாடி தாயாதியார் தலைவர் ராமச்சந்திரராஜா செய்திருந்தார்.