பழநி கோயில் ரோப்கார் இன்று இயங்கும்
ADDED :2698 days ago
பழநி: பழநி கோயில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதால், ரோப்கார், வின்ச் இயங்கும் என சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.பழநி கோயில் ஊழியர்கள் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பணியாளர்கள் சங்க தலைவர் கருப்பணன் கூறியதாவது: நேற்று முன்தினம் அமைச்சர், மாநில நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் பணிக்கொடை, ஊதிய உயர்வு உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளில் 21 கோரிக்கைகளை நிறைவேற்றிதருவதாக அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர்.உள்ளிருப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம், என்றார்.