கண்ணகி கோயிலை சீரமைக்க முடிவு
ADDED :2698 days ago
கூடலுார்: தமிழக- கேரள எல்லையில் மங்கலதேவி கண்ணகி கோயில் தமிழ் கலாசாரபடி சீரமைப்பட உள்ளது.தமிழக மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் மற்றும் கேரள தேவசம்போர்டு நிர்வாகிகளுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று முன்தினம் ஆலோசித்தார். இதன்படி, தமிழக- கேரள மங்கலதேவி கண்ணகி கோயில் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதன் தலைவராக மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்டியும், தமிழக கூட்டுறவுத்துறை தேர்தல் ஆணையருமான ராஜேந்திரன், செயலராக கேரள தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார், பொருளாளராக ராஜகணேசன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரு மாநில ஒத்துழைப்புடன் கோயிலை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.