சாத்துார் வெங்கடாசலபதி கோயிலில் தேரோட்டம் கோலாகலம்
ADDED :2700 days ago
சாத்துார்: ஆனி பிரமோற்ஸவ திருவிழாவை முன்னிட்டு சாத்தூர் வெங்கடாசலபதி கோயிலில் தேரோட்டம் விமரிசையாக நடந்தது.
சாத்துார் வெங்கடாசலபதி கோயிலில் ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றுவருகிறது. விழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (ஜூன் 28ல்) தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்துள்ளனர்.