சக்தி கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :2700 days ago
கெங்கவல்லி: சக்தி கருமாரியம்மன் கோவில் கும்பாபி?ஷகத்தில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கெங்கவல்லி அருகே, வீரகனூர், வடக்குகாடு, அம்மன் நகர், சக்தி கருமாரியம்மன் கோவில் கும்பாபி?ஷக விழாவை முன்னிட்டு, நேற்று காலை, ஐந்து யாக சாலையில் சிறப்பு பூஜை நடந்தது. 10:00 மணிக்கு, கடம் புறப்பாடாகி, கருமாரியம்மன், சக்தி விநாயகர், நவக்கிரகங்கள், பரிவார தெய்வங்களின் விமான கலசத்துக்கு, சிவகார்த்திகேயன் சிவாச்சாரியார் குழுவினர், புனித நீரூற்றி கும்பாபி?ஷகம் செய்து வைத்தனர். நடிகை நளினி, சுற்றுவட்டார மக்கள், சுவாமியை தரிசித்தனர்.